by Chandrasekaram Chandravadani 10-11-2021 | 5:32 PM
Colombo (News 1st) தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் இன்று (10) காலமானார்.
காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார் கூல் ஜெயந்த்.
அன்னாரது முஸ்தபா முஸ்தபா... மற்றும் கல்லூரி சாலை... போன்ற பாடல்களின் நடனம் மிகவும் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டவை ஆகும்.
தமிழ் மட்டுமன்றி மலையாள திரைப்பட பாடல்களையும் உருவாக்கியுள்ளார் கூல் ஜெயந்த்.
உடல்நல குறைவினால் மறைந்த நடன இயக்குநர் கூல் ஜெய்ந்திற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.