by Staff Writer 08-11-2021 | 9:07 AM
Colombo (News 1st) 20 மாதங்களின் பின்னர் அமெரிக்கா தமது எல்லைகளை மீள திறக்கவுள்ளது.
இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட வௌிநாட்டு பிரஜைகளுக்கு இன்று (08) முதல் அனுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொவிட் தொற்று நிலைமையால், வௌிநாட்டு பயணிகளுக்கான தடையை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்தியிருந்தார்.
இதனால் பிரித்தானியா உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.