by Staff Writer 07-11-2021 | 1:18 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண பேருந்து சேவை சாதனையாளருக்கான காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (06) நடைபெற்றது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 150 ஊழியர்கள் காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு - ஏறாவூரில் சுமார் 38 இலட்சம் ரூபா நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உள்ளக வீதியானது போக்குவரத்துக்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபையினுடைய ஏறாவூர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.