by Chandrasekaram Chandravadani 03-11-2021 | 4:22 PM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
குறித்த விடுமுறை தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை வட மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 5 ம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு, விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி தொழில் நுட்பம் மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கான செயலாளர் எச்.டி .சிசிர தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் வழங்கப்படவுள்ள விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.