கன்னட சுப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்

கன்னட சுப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்

by Chandrasekaram Chandravadani 29-10-2021 | 5:57 PM
கன்னட சினிமாவின் சுப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் காலமானார். திடீர் மாரடைப்பால் இன்று (29) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 46 வயதுடைய அவர், காலஞ்சென்ற கன்னட முன்னணி நடிகர் ராஜ்குமாரின் மகனாவார். நடிகர் புனித் விஜயகுமாரின் மரண செய்தி அதிர்ச்சியளிப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாயி ட்வீட் செய்துள்ளார். திரையுலகினர் பலரும் புனித் விஜயகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.