by Staff Writer 20-10-2021 | 4:57 PM
Colombo (News 1st) மன்னார் - பேசாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 17 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அவற்றின் பெறுமதி 05 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
கைவிடப்பட்டிருந்த நிலையில், 08 பைகளில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.