by Staff Writer 20-10-2021 | 3:20 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து A9 வீதி, 155 ஆம் கட்டைப் பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.