இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைப்பு

by Staff Writer 20-10-2021 | 1:31 PM
Colombo (News 1st) இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மற்றும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, AUL 1147 என்ற இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை நாட்டிலிருந்து சென்றிருந்தனர். குறித்த விமானத்தில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வெந்தருவே உபாலி தேரர் மற்றும் மூன்று பீடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 95 தேரர்கள் உள்ளிட்ட 111 பேர் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணித்துள்ளனர்.