by Staff Writer 01-10-2021 | 11:58 AM
Colombo (News 1st) அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரையறை இன்று (01) முதல் நீக்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
இதனிடையே, போதுமான அளவு அந்நிய செலாவணி காணப்படுவதால் எதிர்வரும் 06 மாதங்களுக்கு தேவையற்ற வகையில் பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டாமென இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.