by Chandrasekaram Chandravadani 29-09-2021 | 2:56 PM
Colombo (News 1st) ஆழ்கடலில் அனர்த்தத்தை எதிர்நோக்கிய சோமாலிய மீனவர்கள் நால்வரை பேருவளையை சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
பேருவளை கடற்பரப்பில் இருந்து இரண்டு மீன்பிடி படகுகள் கடலுக்கு சென்றிருந்தன.
அனர்த்தத்தை எதிர்நோக்கிய சோமாலிய மீனவர்கள் நால்வரை வட கடற்பரப்பில் இருந்து இந்த இலங்கை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
அதன் பின்னர் சோமாலிய மீனவர்களை இலங்கை மீனவர்கள் தமது படகில் கரைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது இந்த மீனவர்கள் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தில் உள்ளதுடன், PCR பரிசோதனையின் பின்னர் மேலதிக விடயங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.