ஐ.நா ஆணையாளரின் வாய்மூல அறிக்கைக்கு வரவேற்பு

மலையக தமிழர்களின் பிரச்சினையை ஐ.நா-வில் முன்வைக்க உத்தேசித்துள்ளோம்: மனோ கணேசன்

by Bella Dalima 14-09-2021 | 8:31 PM
Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்றுள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கையில் வாழும் மலையக தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார உரிமை மீறல்களையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்க தாம் உத்தேசித்துள்ளதாக கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இம்முறை, தமிழ் கட்சிகள் ஐ.நா மனித உரிமை ஆணையருக்கு, வெவ்வேறாக கடிதங்கள் எழுதியமை பற்றி மென்மேலும் பேசி முரண்படக்கூடாது என தெரிவித்துள்ள மனோ கணேசன், உண்மையில் இவ்வாறு பல கடிதங்கள் சென்றமை நல்லது என சாதகமான முறையில் பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அடுத்த வருடம் தமிழ் கட்சிகள் ஒருமுகமாக ஐ.நா மனித உரிமை ஆணையகத்தை அணுகலாம் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.