by Bella Dalima 03-09-2021 | 5:32 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியமை தொடர்பில் மெகசின் சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மெகசின் சிறைச்சாலையில் இருந்து வவுனியா சிறைச்சாலைக்கு குறித்த சிறைக்காவலர் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசியொன்று நேற்று (02) கைப்பற்றப்பட்டது.
தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்த தொலைபேசி கைப்பற்றப்பட்டது.