18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி 

18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்

by Bella Dalima 02-09-2021 | 6:31 PM
Colombo (News 1st) 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (02) முதல் மாவட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். நாட்டில் 18 முதல் 30 வயதிற்கிடைப்பட்ட 3.7 மில்லியன் பேர் தடுப்பூசியை பெறவேண்டியுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை விரைவில் நிறைவு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.