​கொரோனா ; சிறுவர்கள் குறித்து அவதானம் தேவை

கொரோனா தொற்றின் மத்தியில் சிறுவர்கள் தொடர்பில் அவதானம் தேவை - வைத்தியர் ஜீ. விஜேசூரிய

by Staff Writer 29-08-2021 | 6:34 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நாளாந்தம் 25 சிறுவர்கள், கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார். சமூகத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நிலைமையின் மத்தியில், தமது குழந்தையின் தினசரி நடவடிக்கைகள் தொடர்பில் பெற்றோர் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம் என வைத்தியர் ஜீ. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இதுவரையில் சுமார் 300 சிறுவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளாகி ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 16 சிறுவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.