புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக நிஹால் தல்தூவ நியமனம்

புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக  நிஹால் தல்தூவ நியமனம்

by Staff Writer 16-08-2021 | 2:37 PM
Colombo (News 1st) புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் C.T. விக்ரமரத்னவினால் புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நிஹால் தல்தூவ இதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார். ஊடகப் பிரிவின் பணிப்பாளராக செயற்படும் நிஹால் தல்தூவ, இன்று முதல் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்படவுள்ளார்.