by Staff Writer 31-07-2021 | 6:22 PM
Colombo (News 1st) பூண்டுலோயா - டன்சினன், அக்கரமலை தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் நால்வர் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
அக்கரமலை தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 4 ஆண் தொழிலாளர்களையே இரண்டு சிறுத்தைகள் தாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.