இசுரு உதான சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு

இசுரு உதான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

by Bella Dalima 31-07-2021 | 3:34 PM
Colombo (News 1st) இலங்கை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதான சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதாகும் அவர் 2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். 21 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 18 விக்கெட்களையும் 35 சர்வதேச T20 போட்டிகளில் 27 விக்கெட்களையும் இசுரு உதான கைப்பற்றியுள்ளார். இசுரு உதான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.