by Staff Writer 15-07-2021 | 4:39 PM
Colombo (News 1st) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸை (Alaina B. Teplitz) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு சம்பந்தமாக இலங்கை தமக்கு வழங்கியிருக்கும் வாக்குறுதிகளின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.