வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணை வேந்தராக கலாநிதி T.மங்களேஸ்வரன் பொறுப்பேற்பு

by Bella Dalima 14-07-2021 | 5:14 PM
Colombo (News 1st) வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி T.மங்களேஸ்வரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், இலங்கை - வவுனியா பல்கலைக்கழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டது. வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணை வேந்தராக கலாநிதி T.மங்களேஸ்வரன் நேற்று (13) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். துணை வேந்தர் இன்று காலை சர்வமத ஆசியுடன் கடமைகளை பொறுப்பேற்றார். கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் துணை வேந்தர் கலாநிதி T.மங்களேஸ்வரன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
பாரிய நீண்ட கால சவாலுக்கு மத்தியில் இந்த பல்கலைக்கழகத்தை பெற்றிருக்கிறோம். கடினமான உழைப்பிற்கு கிடைத்த பலன் தான் இந்த பல்கலைக்கழகம். என்னுடைய இலக்கு இந்த மூன்று வருட காலப்பகுதியில் வவுனியா பல்கலைக்கழகத்தை மென்மேலும் தரமுயர்த்துவதுடன், பிரதேச அபிவிருத்திக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்வதாகும்.