உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இடைக்கால அறிக்கை

by Staff Writer 13-07-2021 | 12:55 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, 07 ஆயர்களினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை இன்று (13)  ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். இன்று (13) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, ஆண்டகை இதனை குறிப்பிட்டார்.