by Staff Writer 11-07-2021 | 10:32 PM
Colombo (News 1st) தமிழகத்தின் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியிலுள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வருகின்ற 16 வயதான ரஞ்சன் திவ்யேஷ் என்ற மாணவன் டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.
உக்ரைனைச் சேர்ந்த இளம்பெண் க்ருடாஸ் ருசியானா, டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து நிலைநாட்டியிருந்த கின்னஸ் சாதனையையே இந்த மாணவன் முறியடித்துள்ளான்.
05 வருட யோகா பயிற்சியின் விளைவாக திவ்யேஷ், டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்துள்ளார்.