COVID-19: 7 சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை

COVID-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 7 சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை: உயர் நீதிமன்றம்

by Staff Writer 06-07-2021 | 7:28 PM
Colombo (News 1st) COVID-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்தின் ஏழு சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த சரத்துக்களை திருத்தமின்றி நிறைவேற்றுவதாக இருந்தால், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகள் அவசியம் என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. COVID-19 உடன் தொடர்புடைய நிலைமைகளால் மாற்று நீதிமன்றங்களை நிறுவுவது, தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது, உடன்படிக்கைகளில் இணக்கம் காணப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாமற்போன சில தரப்பினருக்கு தற்காலிக நிவாரணங்களை வழங்குவது உள்ளிட்ட சில ஏற்பாடுகளை வழங்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.