கைதான இராணுவ மேஜர் ஜெனரலுக்கு பிணை

வனஜீவராசிகள் அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கம்: கைதான இராணுவ மேஜர் ஜெனரலுக்கு பிணை

by Staff Writer 01-07-2021 | 4:23 PM
Colombo (News 1st) மின்னேரியா சரணாலயத்தில் வனஜீவராசிகள் அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் ஜெனரலுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கெக்கிராவ நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல இராணுவ மேஜருக்கு உத்தரவிடப்பட்டது. மின்னேரியா சரணாலயத்தில் வனஜீவராசிகள் அதிகாரிகளுடன் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று முற்பகல் தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய போது மேஜர் ஜெனரல் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.