by Staff Writer 29-06-2021 | 2:30 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலில் தீ பரவியதை அடுத்து, நாட்டின் வெவ்வேறு கடற்பிராந்தியங்களில் இதுவரை 150 கடலாமைகளின் உடல்கள் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, 15 டொல்பின்களும் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த கடலாமைகளின் உடற்பாகங்கள், மேலதிக பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.