கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,944 ஆக அதிகரிப்பு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,944 ஆக அதிகரிப்பு

by Staff Writer 27-06-2021 | 7:39 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (27) உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,944 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று 1,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,52,996 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றிலிருந்து 2,158 பேர் பூரண குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,18,998 ஆக அதிகரித்துள்ளது.