X-Press Pearl: 2 வாரங்களுக்குள் நட்டஈடு கிடைக்கும்

X-Press Pearl: முதற்கட்ட நட்டஈடு இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா

by Staff Writer 22-06-2021 | 9:03 PM
Colombo (News 1st) தீப்பற்றிய X-Press Pearl கப்பல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான முதற்கட்ட நட்டஈடு இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அந்த நட்டஈடு கிடைத்தவுடன் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவற்றை வழங்கவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். மேலும், மீன்களை சாப்பிடுவதால் ஆபத்துகள் ஏற்படும் என கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் கூறினார்.