லிந்துலை நகரசபை தலைவர் தனிமைப்படுத்தப்பட்டார் 

லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 07 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் 

by Staff Writer 21-06-2021 | 1:31 PM
Colombo (News 1st) லிந்துலை நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 07 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி தலவாக்கலை நகரிலுள்ள திருமண மண்டபமொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று (20) இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். எவ்வாறாயினும், குறித்த 07 பேரையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் கே. சுதர்ஷன் தெரிவித்தார். லிந்துலை நகரசபைத் தலைவரும் அவரது மகனும் சென்கிளேயர் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையோர் ஹொலிரூட் லோவர் டிவிஷன் மற்றும் தலவாக்கலை நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களென கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் மேலும் கூறினார். இதனிடையே, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.