by Bella Dalima 12-06-2021 | 3:59 PM
Colombo (News 1st) இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யவ்னே நகரில் 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இடம்பெறும் அகழ்வாராய்ச்சியின் போது இந்த கோழி முட்டை உடையாமல் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளை கடந்த பின்னரும் கோழி முட்டை உடையாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, இதனை மிகவும் அரிதான கண்டுபிடிப்பு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.