by Staff Writer 07-06-2021 | 5:25 PM
Colombo (News 1st) சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிடுவோர் மற்றும் பகிர்வோர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (07) முதல் விசேட விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப்பிரிவின் குழுவொன்று இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.