அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் இல்லை

அரசாங்கத்தின் பொறிமுறைகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர் - சஜித் பிரேமதாச

by Staff Writer 02-06-2021 | 10:32 PM
Colombo (News 1st) அரசாங்கத்தின் அனைத்து பொறிமுறைகள் மீதான நம்பிக்கையை, மக்கள் இழந்துள்ளதாக சஜித் பிரேமதாச அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பரஸ்பர வேலைத் திட்டங்களினால் நாட்டில் பாரிய சிக்கல் எற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் உரத்தடை ஒன்றை கொண்டு வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பாதிப்புக்குள்ளாகியுள்ள மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்  தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆடைத் தொழிற்சாலைகளில் சேவையாற்றுவோர், கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த மாடிக் குடியிருப்புகள், தோட்ட வீடுகள், ஏனைய வீடுகளில் வாழ்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக  அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை தொடர்பில், குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்டகால திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.