by Staff Writer 01-06-2021 | 9:20 PM
Colombo (News 1st) இன்று (01) இதுவரை 1,989 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,86,364 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,53,371 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 31,509 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் மேலும் 04 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
அத்துடன், கடந்த 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 39 மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 1,484 பேர் உயிரிழந்துள்ளனர்.