வங்கியில் 910 மில்லியன் நிதி மோசடி: ஒருவர் கைது

தனியார் வங்கியில் 910 மில்லியன் ரூபா நிதி மோசடி: பணிப்பாளர் சபையிலிருந்தவர் கைது

by Staff Writer 27-05-2021 | 3:03 PM
Colombo (News 1st) மஹரகமயிலுள்ள தனியார் வங்கியொன்றில் 910 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிபிலையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். தனியார் வங்கியின் பணிப்பாளர் சபையிலிருந்த ஒருவரே இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பிபிலையை சேர்ந்த 44 வயதான குறித்த நபர் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நிதி மோசடியில் ஈடுபட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.