by Staff Writer 24-05-2021 | 7:05 PM
Colombo (News 1st) இலங்கையில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்றிட்டங்களை உள்ளடக்கிய ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் இன்று காலை இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதுருசூரிய மற்றும் இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் சென்செய் சிசிர குமார , செயலாளர் சென்செய் கீர்த்தி குமார ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வில் இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் உப தலைவர் சென்செய் நதீத்த சொய்சா , மேல் மாகாண தலைவர் சென்செய் நீல் , தொழில்நுட்பக் குழு ஆலோசகர் சென்செய் ஜெயசிறி பெரேரா, தேசிய தெரிவுக்குழு உறுப்பினர் சென்செய் அன்ரோ தினேஷ் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.