இன்று 1,077 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Staff Writer 29-04-2021 | 6:08 PM
Colombo (News 1st) இன்று (29) இதுவரை 1,077 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, நாட்டில் இதுவரை 1,06,030 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 9,918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 95,445 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். நாட்டில் 661 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, வட மாகாண கொரோனா நிலை தொடர்பிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஐந்து மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலின் பின்னர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன்போது, யாழ் மாவட்டத்தில் இதுவரை 1,544 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகக் குறிப்பிட்டார். நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். இன்று வரை மாவட்டத்தில் 19 இறப்புகள் பதிவாகியுள்ளன.