by Staff Writer 26-04-2021 | 4:25 PM
Colombo (News 1st) பத்தரமுல்லை - கொஸ்வத்தையில் அமைந்துள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தை நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பணியகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கொஸ்வத்தை அலுவலகத்தில் முதலாம் மற்றும் இறுதி அனுமதி பெறும் கரும பீடங்கள் மற்றும் கொரிய வேலைவாய்ப்பு பிரிவு ஆகியவற்றில் மட்டுபடுத்தப்பட்ட சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய அலுவலங்களின் செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதால் வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதி தலைமை அலுவலகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.