Colombo (News 1st) இன்று (26) இரவு 8 மணி தொடக்கம் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புஹார் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்ஹேன, ஹீரலு கெதர மற்றும் களுஅக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியனவும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்தை, பெலவத்தை கிழக்கு மற்றும் பெலவத்தை வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
