by Staff Writer 24-04-2021 | 4:06 PM
Colombo (News 1st) திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளர்களை அனுமதிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய 5 தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நோயாளர்களை பார்வையிடுவதற்கும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இன்று முற்பகல் வரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.