யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு 

by Bella Dalima 22-04-2021 | 8:21 PM
Colombo (News 1st) யாழ். கொடிகாமம் - கச்சாய் இராணுவ வீதித் தடையில் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான உழவு இயந்திரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கச்சாய் இராணுவ வீதித் தடையில் கட்டளையை மீறி பயணித்த உழவு இயந்திரம் மீது நேற்று (21) இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே கட்டளையை மீறி பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் தலைமறைவாகினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.