பொது சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பங்கேற்பு

by Staff Writer 16-04-2021 | 8:15 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றின் பின்னர் உலகளாவிய ரீதியிலான பொது சுகாதாரம் தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரைசினா கலந்துரையாடலில் (Raisina Dialogue) விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நேற்று (15) பங்குபற்றியிருந்தார். உலகளாவிய பொருளாதாரம் , அரசியல் நிலைமை மற்றும் சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கான கலந்துரையாடல் இந்திய வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணையத்தளத்தின் மூலமாகவே இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் இணையம் ஊடாக பங்கேற்றிருந்தார். இதன்போது, COVID-19 தொற்றுக்கு பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கருத்துத் தெரிவித்திருந்தார்.