ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நிலை மோசம்

சிறை வைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நிலை மோசம்

by Staff Writer 08-04-2021 | 11:48 AM
Colombo (News 1st) ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவான்லியின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சிறையிலடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவான்லியின் கை மற்றும் கால்கள் உணர்விழப்பதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குடலிறக்கம் மற்றும் முதுகெலும்பு பிரச்சினைகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு கோரி கடந்த வாரம் முதல் நவான்லி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நவான்லியின் உடல்நிலை தற்போது மோசமடைந்து வருவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது.