by Bella Dalima 07-04-2021 | 4:50 PM
Colombo (News 1st) COVID அச்சுறுத்தல் காரணமாக இந்திய தலைநகர் புது டெல்லியில் இரவு நேரங்களில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை புது டெல்லியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு COVID தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புது டெல்லியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 5100 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஒப்பிடும் போது இந்தத் தொகை அதிகரித்த வேகத்தை கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சுகாதார தரப்பினர், அரச அதிகாரிகள் மற்றும் அத்தியாவசி சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களுக்கு பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.