by Staff Writer 03-04-2021 | 3:44 PM
Colombo (News 1st) தம்புள்ளையில் கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலனிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை கொழும்பு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் ஆய்விற்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுகர்விற்கு பொருத்தமற்றது என சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று முன்தினம் (01) குறித்த எண்ணெய் கொள்கலன் கைப்பற்றப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் தம்புள்ளை நீதவானுக்கு நேற்று அறிக்கையிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கொழும்பு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திடமிருந்து எண்ணெய் தொடர்பான ஆய்வறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவிற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.