by Staff Writer 18-03-2021 | 4:00 PM
Colombo (News 1st) பெரும்போகத்தில் 13,800 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இருந்தே அதிக நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் பேராசிரியர் ஜட்டால் மான்னம்பெரும தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3,847 மெட்ரிக் தொன் நெல் 55 ரூபா நிர்ணய விலையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு தேசிய செயற்றிட்டம் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நாட்டின் 6 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இரண்டு மாதங்களில் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்பார்த்துள்ளது.