by Staff Writer 15-03-2021 | 6:32 PM
Colombo (News 1st) சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்ஷபதி நிகழ்ச்சியில் தெரிவித்த மாணவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இரத்தினபுரி பிரதேச சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.