அசோக் அபேசிங்கவிடம் 5 மணித்தியாலங்கள் விசாரணை

அசோக் அபேசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் 5 மணித்தியாலங்கள் விசாரணை

by Staff Writer 11-03-2021 | 6:39 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க வௌியிட்ட கருத்து குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் இன்று 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டது. இன்று காலை 9.30 அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அங்கிருந்து வௌியேறியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை 9.15 அளவில் பாராளுமன்ற உறுப்பினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.