மேல் மாகாணம் தவிர்ந்த பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி

by Staff Writer 08-03-2021 | 2:40 PM
Colombo (News 1st) மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 15ஆம் திகதி கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஜீ.எல். பிரீஸ் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தினார். மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் இரு நாட்களில் அவரின் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.