வடக்கிற்கான மின் விநியோகம் தடை

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வடக்கில் மின் விநியோகம் தடை 

by Staff Writer 08-03-2021 | 8:05 PM
Colombo (News 1st) அநுராதபுரம் புதிய க்ரிட் (Grid) உப மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வட மாகாணத்திற்கான மின்சார விநியோகம் இன்றிரவு (08) 7 மணி முதல் தடைப்பட்டுள்ளது. இதனைத் தவிர, வாழைச்சேனை, ஹபரணை, பொலன்னறுவை மற்றும் வவுனியா ஆகிய Grid  உப மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார். இதனால், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.