விமானப்படையின் இரண்டு படையணிகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள்
by Bella Dalima 05-03-2021 | 7:43 PM
Colombo (News 1st) நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டி விமானப்படையின் இரண்டு படையணிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால், ஜனாதிபதி வர்ண விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
ஜனாதிபதி வர்ண விருது வழங்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமானப்படை முகாமில் இன்று நடைபெற்றது.
விமானப்படையின் 70 வது ஆண்டு நிறைவையொட்டி, ஐந்தாம் இலக்க போர் படையணிக்கும், ஆறாம் இலக்க போக்குவரத்து ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கும் ஜனாதிபதி வர்ண விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
இதற்கமைய, இலங்கை விமானப்படைக்கு 13 ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வின் பின்னர், கட்டுநாயக்க தலைமை விமானப்படை முகாமின் C130ஆம் உப முகாமின் இரண்டாம், ஐந்தாம் இலக்க படைப்பிரிவுகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.
விமான சாகசத்திற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், விமானிகளுடன் குழு நிழற்படத்திலும் தோன்றினார்.
'விமானப்படையின் 70 ஆண்டு ஆகாயப் பலம்' என்ற தலைப்பில் எயார் கமாண்டர் சன்ன திசாநாயக்க எழுதிய புத்தகம் இதன்போது ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.