by Bella Dalima 27-02-2021 | 4:21 PM
Colombo (News 1st) சர்வதேசத்தின் நலனுக்காக தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான அனுபவங்களையும் வளங்களையும் பகிர இந்தியா முன்வந்துள்ளது.
COVAX திட்டத்தில் இந்தியா ஆற்றும் பங்களிப்பிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தால் நன்றி தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்திய பிரதமரினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
COVAX திட்டத்தினூடாக COVID-19 தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாகவும் 60-இற்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது தடுப்பூசி பயன்பாட்டை ஆரம்பித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
முன்மாதிரியாக விளங்கும் இந்தியாவினை ஏனைய நாடுகள் பின்பற்றுமென தாம் நம்புவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இதற்கு பதில் வழங்கும் வகையில், இந்திய பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் உலக நன்மைக்காக தடுப்பூசி தொடர்பான அனுபவங்களையும் அறிவையும் வளங்களையும் பகிர இந்தியா தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.