by Staff Writer 27-02-2021 | 8:48 PM
Colombo (News 1st) COVID தடுப்பூசி உரிய முறைமையின் கீழ் வழங்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் கிவுலேகட பகுதியில் இடம்பெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்வில் கலந்துகொண்ட போதே, ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
கோமரங்கடவல பிரதேச செயலக பிரிவிலுள்ள அடம்பன் பகுதியின் கிவுலேகட கிராமத்தில் இன்று கிராமத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் இந்த கிராமத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.